திருவள்ளூர்: அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடு - கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடு - கலெக்டர் தகவல்
X

திருவள்ளூர் மாவட்ட  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் (பைல் படம்)

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும்,

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இதர வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை (21ம் தேதி) திருவள்ளூர் ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தடுப்பூசி போடும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil