திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா..!

திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா..!
X

திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் தீமிதித்த பக்தர்.

மாகர்ல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய திருவிழா திரௌபதி அம்மன் தீ மிதி திருவிழாவில் விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

பெரியபாளையம் அருகே மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழா மற்றும் திரௌபதியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்த76 பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபாடு.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் அடுத்த மாகரல் கண்டிகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் திரௌபதியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


பொன்னியம்மன் ஆலய திருவிழா கடந்த10.ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து கங்கை திரட்டல், பூங்கரகம் ஊர்வலம், கூழ் வார்த்தல்,பொங்கல் வைத்தல், கும்பம் படைத்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த 14.ஆம் தேதி திரௌபதி அம்மன் கோயிலில் தர்மராஜாதூவாரோஜன் ஸ்தம்பம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி கிராமத்தைச் சேர்ந்த 76. பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து பகாசூரன் சம்ஹாரம் பாஞ்சாலி அர்ஜூனன் திருக்கல்யாணம் சீர்வரிசையோடு நடைபெற்றது. அம்மன் திருவீதி உலா நச்சுக்குழி யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வாகனத்தில் வைத்து ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புனித நீராடிய பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த 76.பக்தர்கள் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டு தீ குண்டத்தில் ஒருவருக்கு, ஒருவர் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future