சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டுமென்றும் காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்கிட வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான கால முறை ஊதியம் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம்ரூபாய் 6750/ அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும்.

10.வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களில் 50% முன்னுரிமை அளித்திட வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 62 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழை வாயிலின் முன்பு மாவட்ட தலைவர் சிவா சுலோச்சனா தலைமையில் பெருந்திரள் முறையீடு கண்டன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன்,மாவட்ட துணை தலைவர் மாலா, மலர்கொடி, சுப்பிரமணி, வனிதா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai solutions for small business