மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
X
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு தொடக்க கல்வி டிட்டோ ஜாக் சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக 5.அம்ச கோரிக்கைகளை முன்வைத்து. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. தாஸ் கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்: எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூலம் 1,2,3, ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பீடு செய்யும் பொருட்டு பி.எட் பயிற்சி பெறும் மாணவர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதை கைவிட வேண்டும்.

எண்ணும் எழுத்தும் திட்டத்தினை 1 முதல் 5 வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்போடு ஆசிரியர்களுக்கு கூடுதலான பணி சுமைகளை உருவாக்கும் திட்டத்தினை முழுமையாக கைவிட வேண்டும்.ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சார்ந்த செயல்பாடுகளை தவிர (இஎம்ஐஎஸ்) எமிஸ் செயலியில் பல்வேறு பதிவேற்றங்களை செய்ய தூண்டுவதை நிறுத்தி முழுமையாக கற்பித்தல் பணியை செய்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் .

ஆசிரியர்களுக்கு காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதையும் எண்ணும் எழுத்தும் மற்றும் குறுவள மையப் பயிற்சி உள்ளிட்ட பிற பயிற்சிக்கு ஏதுவாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும் ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை நடத்துவதால் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கிறது.

அக்கூட்டத்தில் பெற்றோர்களை அழைப்பதும் கூட்டம் ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்வதால் பணிச்சுமைகள் அதிகரிப்பதால் வருடத்திற்கு மூன்று, அல்லது நான்கு கூட்டங்கள் மட்டுமே நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் ஜான் மாநில பொருளாளர் ருக்மாங்கதன் மாநில செயலாளர் பிரசன்னா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.




Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?