திருவள்ளூரில் சார் பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் சார் பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளூரில் வேடங்கி நல்லூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி அமர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

திருவள்ளூரில் வேடங்கி நல்லூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :

திருவள்ளூர் வேடங்கி நல்லூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட அமைப்பாளர் கி.குமார் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றவாறு மனைபதிவை எளிமைப்படுத்த வேண்டும். மனைபதிவில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணி அமர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடத்த வேண்டும்

ரியல் எஸ்டேட் சட்டத்தின் படி புரமோட்டர் அல்லாத ஏழை எளிய மக்கள் மனைகளாக பதிவில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கியும் காலிப் பணியிடங்களை நிரப்பியும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

அரசாணை 80-ன்படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியர்களையும் உடனடியாக பணியில் அமர்த்திட வேண்டும். பொது கலந்தாய்வின் மூலமாக பணியிட மாறுதல்களை நிரப்பிட வேண்டும். உரிய காலத்தில் முறையாக பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வினை வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு