திருவள்ளூர், பெரியபாளையம் அருகே ஆபத்தை உணராமல் பயணம் : கரணம் தப்பினால் மரணம்..!
ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் பயணிக்கும் விவசாயிகள்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆபத்தை உணராமல் ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் மக்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தை உணராமல் பயணம் செய்வது கண்டிக்கத்தக்கது. விபத்து நேர்ந்துவிட்டால் யாரை குற்றம் சொல்வது? அதனால் இப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம், தண்டலம், காக்கவாக்கம், செங்கரை, சூளை மேனி உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பூக்கள், வெண்டை, கத்திரி, காராமணி, பீர்க்கங்காய், உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப காய்கனிகள் பூக்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இவைகளை அறுவடை செய்து சென்னை கோயம்பேடு, திருவள்ளூர், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, ஆரணி, பெரியபாளையம், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அறுவடை செய்யும் பொருட்களை சிறிய சரக்கு வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். நேரத்திற்கு பேருந்துகள் வராதது மற்றும் அறுவடைபொருட்களை கொண்டுசெல்லும் நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாதது போன்ற காரணங்களால் இரண்டு அல்லது மூன்று விவசாயிகள் ஒன்றுசேர்ந்து ஒரு சிறிய சரக்கு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி காய்கறிகளை கொண்டு செல்கின்றனர். விற்பனை முடித்துவிட்டு இதுபோன்று கொண்டு செல்லும் வாகனங்களிலே விவசாயிகள் ஆபத்தை உணராமல் இது போன்று ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர.
எனவே பெரியபாளையம் ஊத்துக்கோட்டை இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரிய விபத்துகள் ஏற்படும் முன்னர் அரசும் மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்தி இந்தப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu