திருவள்ளூரில் ஆபத்தான மின் கம்பங்களை அகற்ற கோரிக்கை..!
திருவள்ளூரில் சேதமாகியுள்ள மின் கம்பம்.
பெரியபாளையம் அருகே பல வருடங்களுக்கு முன்பு நடப்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து ஆபத்து விளைவிக்கும் நிலையில் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பே அகற்றி புதிய கம்பங்கள் நடப்படுமா என இபபகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ராள்ளாபாடி- குமரப்பேட்டை செல்லும் அஞ்சாத அம்மன் கோவிலுக்கு செல்லும் வளைவு சாலை ஓரங்களில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்ட் கம்பங்களானது தற்போது சிதிலமடைந்து சிமெண்ட் கான்கிரீட்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே எட்டிப்பார்த்தபடி எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன.
பழுதடைந்த கம்பங்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், அரசுத்த்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பெரியபாளையத்தில் இருந்து புதுவாயிலுக்கு செல்லும் சாலை என்பதால் திருவள்ளூரில் இருந்து நாள்தோறும் இந்த வழியாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி, ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு இணைக்கும் சாலையாக இருப்பதால் நாள்தோறும் லாரிகள், மற்றும் பேருந்துகள், இரு சக்கரம் கார் போன்ற வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன.
இந்த ஆபத்தான மின்கம்பங்கள் சாலை ஓரத்தில் உள்ளதால் மழைக்காலங்களில் சற்று வேகமாக காற்று வீசினால் கூட இக்கம்பம் சரிந்து சாலை குறுக்கே விழும் அபாயமும் உள்ளது. இது மட்டுமல்லாமல் காலை நேரங்களில் இவ்வழியில் பொதுமக்கள் நடைப்பயிற்சியும் செய்வார்கள்.
எனவே ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த ஆபத்தான மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அகற்றி விபத்துகளை தவிர்க்கவேண்டும் என் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப் போன்ற மின்கம்பங்கள் இந்தக் குமார பேட்டை கிராமத்தில் பல பகுதிகளில் உள்ளதாகவும், அவைகளிலும் கண்டறிந்து அப்புறப்படுத்தி புதிய கம்பங்களை நடவு செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா மின்வாரிய அதிகாரிகள்?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu