ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும் திருவள்ளூர் பஜார் வீதியில் திரண்ட கூட்டம்!

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும்  திருவள்ளூர் பஜார் வீதியில் திரண்ட கூட்டம்!
X

ஊரடங்கை மீறி திருவள்ளூர் பஜார் வீதியில் திரண்ட மக்கள் கூட்டம்

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும் திருவள்ளூர் நகர் பஜார் வீதிகளில் திரண்ட மக்களால் தொற்று அதிரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. நகர் பகுதிகளில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் தொற்று பரவி வருவதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் காய்கறி, பழங்கள் மலர்கள், உரக்கடைகள், மளிகை கடைகள் மட்டும் திறந்து சமூக இடைவெளியை கடைப் பிடித்து விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் வழக்கம்போல மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் குவிந்து பொருட்கள் வாங்கி செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும் இதே நிலை தொடர்கிறது. இதனால் நோய் தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் நிலவுகின்றது. தொடர்ச்சியாக வாகனங்கள் சென்று வந்தாலும், அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையிலும் போலீசார் முறையாக வாகன சோதனையை மேற்கொண்டாலும் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!