பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்
பெரிய பாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழாவை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்கள் திருவிழா நடைபெறும். ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். ஆடி திருவிழாவை முன்னிட்டு எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட உதவி இயக்குனர் ரூபேஷ் குமார் (ஊராட்சிகள்) தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு பெரும் தலைவர் வடமதுரை கே.ரமேஷ், துணைத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஸ்டாலின், ஆதியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது
ஆடி மாத திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என விவதிக்கப்பட்டது. பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம், அவசர மருத்துவ நடமாடும் குழுக்கள் ஏற்படுத்துவது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் குப்பைகள் அள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகளை மேற்கொள்ளும் செலவுகளை கோயில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்கள் பாதிக்காத வகையிலும், பாதுகாப்பான முறையில் சாமி தரிசனம் செய்து திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.
இக்கூட்டத்தில் பவானி அம்மன் கோவில் அறங்காவலர் லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், மேலாளர் வெங்கட், பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் தரணீஸ்வரி, சுகாதாரத்துறை எல்லாபுரம் வட்டார மருத்துவர் தீபக் , சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை போக்குவரத்து துறை என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu