திருவள்ளூரில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்..!

திருவள்ளூரில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்..!
X

காங்கிரஸ் தலைவருக்கு மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளூரில் ஒருங்கிணைந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில். மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்பு.

காங்கிரஸ் வலிமையாக இருந்தால் கௌரவம் கிடைக்கும் என்றும்,2029 நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நின்று வெற்றி பெற போவதாகவும், அதற்காக 19, நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து அனுப்பப்படும் என்று திருவள்ளுவர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.


ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்மானது திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த்செந்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைசந்திரசேகர்,தெற்கு மாவட்ட தலைவர் ஆர் எம் தாஸ், ஆவடி மாதவரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் யுவராஜ், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்துகொண்டு கட்சியை வலிமைப்படுத்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில்

தமிழகத்தின் அரசியல் பயணம் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சிறப்பு மிக்க மாவட்டமாக திகழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பின்னர் தொடர்ந்து பேசுகையில்

பாஜக தலைவர் அண்ணாமலை, கலைஞர் துவங்கி அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என வரிசையாக ஒவ்வொருவரையும் குறை கூறிக் கொண்டே தான் இருப்பார். அவர் குறை கூற வேண்டும். அது நல்லது.

மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும்,பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையினர் ஸ்காட்லாந்து காவல்துறையினருக்கு இணையானவர்கள். குற்றவாளிகளை யார் என்ன காரணம் ஆகியவற்றை முழு விசாரணைக்கு பின்னர் உண்மை விவரத்தை வெளியிடுவார்கள்.

தொடர்ந்து தமிழகத்தில் கொலைகள் நிகழ்வதை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற கட்சி என்றும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் போட்டியிட்ட பத்து தொகுதிகளில் இரண்டு பெண்வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு எம்பிக்கள் ஆகி உள்ளனர் என்றும் பெண்களை மதிக்கின்ற கட்சி காங்கிரஸ் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!