திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்..!

திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்..!
X

திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

கடம்பத்தூர் பகுதியில் திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஈடுபட்டார்.

அண்ணாமலை ஒரு ஊதுகுழல் - சசிகாந்த் செந்தில் விமர்சனம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது நிலைமை என்னை என்பதை வரும் தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள் என திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியின் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது கொண்டஞ்சேரி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் இந்தி எதிர்ப்பு போராட்டதை அண்ணாமலை விமர்சித்து பேசி இருப்பது ஆதிக்க மனப்பான்மை காட்டுவதாகவும், அண்ணாமலை ஒரு ஊதுகுழல் என்றும் அவர் சுயமாக சிந்திக்கும் திறமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றார்.

பாசிச சக்தி கீழே வேலை பார்ப்பவர்கள் அப்படி தான் இருப்பார்கள். அவர் தலைவர்கள் மட்டும் தினம் பொழுதுபோக்காக பேசிட்டு இருப்பர். அவர் பேசுவது அவருக்கு புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது மட்டும் இல்லை இன்னும் அரசியலால் எதிர்கொள்ள முடியாதவர்கள் இடி,சிபிஐ போன்ற அரசு அதிகாரத்தை வைத்து செய்கிறார்கள். இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இது எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது என நினைக்கத் தோணல.மாநிலத்தின் முதலமைச்சருக்கு இது போன்று ஆகும் போது ஒரு சாமானியனை அவர்கள் எந்த எந்த நிலைக்கு ஆளாக்குவார்கள்? அவர்களுக்கு கொடி தூக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்

இன்று வெளியே எரிகின்ற நெருப்பு உங்க வீட்டுக்கு வருவதற்கு நேரம் ஆகாது. அதனால் ஜனநாயகத்தின் அரசியலமைப்பு சட்டத்தையும் அதை நம்பி அதன் கூட வரும் மக்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!