கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் மீது புகார் மனு.

கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் மீது புகார் மனு.
X

திருமழிசையில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என மாவட்ட ஆட்சியர்யிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்

திருவள்ளூர் அருகே கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை வராமல் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருமழிசையில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என மாவட்ட ஆட்சியர்யிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவிஇளங்காளியம்மன், மற்றும்ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்மானது அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து கட்டப்பட்ட கோவிலாகும்,இந்தக் கோவிலில் ராஜகோபால் நாயக்கர் என்பவர் ஆலய நிர்வாகியாக பொறுப்பேற்று வருகின்றனர். இந்நிலையில், உயர்ந்த சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும் அவதூறான வார்த்தைகளை பேசுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும்இது தொடர்பாக கடந்த மாதம் 14/ 7/ 2003 அன்று திருவள்ளூர் கோட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதிலும் உயர்ந்த சமூகத்தை சேர்ந்த நபர்கள் சமாதான பேச்சு வார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததால் .இரு தரப்பினருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் ஆலய நிர்வாகத்தினை நிர்வாகிப்பது சம்பந்தமாக இந்து சமயம் அறநிலைத்துறைக்கு ஒப்படைவு செய்ய சாத்தியங்கள் பரிசீலனை செய்யப்படும் வரை மேற்படி திருக்கோயில்களில் அன்றாட பூஜைகள் மட்டும் நடைபெற வேண்டும், என்று கோட்டாட்சியர் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் கோட்டாட்சியர் உத்தரவினை அவமதிக்கும் விதமாக தாழ்த்தப்பட்ட மக்கள் தினசரி நடக்கும் பூஜையில் கூட கலந்து கொள்ளக் கூடாது என்று திருக்கோவில் ஆலயங்களை திறக்காமல் பூட்டி வைத்தனர். எனவேஇரு தரப்பினர் இடையைமத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் நபர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் வேணுகோபால் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆல்.பி.ஜான் வர்கீஸ் நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.




Tags

Next Story
ai solutions for small business