தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 25-இல் திருவள்ளூர் வருகை.. அமைச்சர் ஆவடி நாசர் தலைமையில் ஏற்பாடு...

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 25-இல் திருவள்ளூர் வருகை.. அமைச்சர் ஆவடி நாசர் தலைமையில் ஏற்பாடு...
X

திருவள்ளூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆவடி நாசர் பேசினார்.

திருவள்ளூரில் ஜனவரி 25 ஆம் தேதி நடைபெறும் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சந்திரன் எம்.எல்.ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் எம்எல்ஏ, சட்ட மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.


கூட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி நாசர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் ஆவடி நாசர் பேசியதாவது:

ஒரு மொழிக்காக போராடி தனது உடலை தீக்கிரையாக்கி உயிர் நீத்த இயக்கம் என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 25 ஆம் தேதி திருவள்ளூருக்கு வருகை தர இருக்கிறார். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைத்துவர பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் , திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி, நடுகுத்தகை ரமேஷ், மூர்த்தி, மாநில நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், ஜெரால்டு, சேகர், ஆதிசேசன், நாகலிங்கம், பாஸ்கர் சுந்தரம், ஸ்டாலின், அன்புவணன், மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன், ராஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, குமரன், உதயமலர் பாண்டியன், ஜெயபாரதி, மிதுன் சக்ரவர்த்தி, சிட்டிபாபு, ஆதம், சுப்பிரமணியம், ராஜேஸ்வரி ரவீந்திரநாத், ஜெயபாலன், சீனிவாசன், காயத்திரி ஸ்ரீதரன், நரேஷ் குமார், எத்திராஜ், காஞ்சனா சுதாகர், மகாதேவன், கதிரவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாபு நன்றி கூறினார்.

Tags

Next Story
ai robotics and the future of jobs