கைதிகளுக்கு இடையே மோதல்: 4 பேர் மீது வழக்குப்பதிவு
புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் காயம் அடைந்தார். 4பேர் மீது வழக்கு பதிவு.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வந்து சந்திப்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில் சிறையில் இம்மானுவேல் என்ற கைதி பார்வையிலார்கள் சந்திக்கும் நேர்காணல் அறைக்கு சென்று விட்டு மீதும் திரும்பி தமது சிறைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பிற கைதிகள் முன்விரோதம் காரணமாக பல் துலக்கும் பிரஷ்ஷினை கத்தி போல கூர்மையாக்கி இம்மானுவேல் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் காயமடைந்த கைதி இம்மானுவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பாக சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில், காவாமேடு சூர்யா, நிதிஷ்குமார், பார்த்திபன், மாரிமுத்து ஆகிய 4பேர் மீது புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் உள்ள கைதிகளுக்கு இடையே பெரும் பரபரப்பையும் பதற்றமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu