ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 2கோடி மோசடி செய்த இருவர் கைது

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 2கோடி மோசடி செய்த இருவர் கைது
X

பைல் படம்

திருவள்ளூரில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 2கோடி மோசடி செய்த சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜீபேட்டை சத்யராஜ் (29). இவரது நண்பர்கள் கண்ணபிரான், முருகன், பாலாஜி மற்றும் சீனிவாசன் இவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ், வெங்கடேசன், பாலாஜி, அரவிந்த், ராகுல் ஆகியோரை அணுகியுள்ளார். அப்போது தங்களுக்கு ரயில்வே துறையில் உயர் அதிகாரிகள் தெரியும் எனக் கூறி, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதை நம்பி இந்நிலையில் தலா ரூ. 2,50,000 கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, நம்பும் வகையில் நியமன ஆணை மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கியுள்ளனர். இதை விசாரித்ததில் போலியாக தயார் செய்து வழங்கி ஏமாற்றியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் 40 பேரிடம் ரூ. 2கோடி வரையில் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. வருண் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் வழக்குப்பதிந்து சகோதரர்களான அரவிந்தன் (24), ராகுல் (26) ஆகிய இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் புஷ்பராஜ், வெங்கடேசன் மற்றும் பாலாஜி ஆகிய மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil