இளம் பெண்ணை ஏமாற்றி கருக்கலைப்பு செய்த சினிமா தயாரிப்பாளர் கைது..!

இளம் பெண்ணை ஏமாற்றி கருக்கலைப்பு செய்த  சினிமா தயாரிப்பாளர் கைது..!
X

சினிமா தயாரிப்பாளர் முகமது அலி

கொளத்தூர் அருகே இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த தயாரிப்பாளர் கைது.

கொளத்தூர் அருகே தனது தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார். கருக்கலைப்பு செய்ததுடன், 5 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அலி ( வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், கீழ் அயனம்பாக்கத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரி ( வயது 28) (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் லிங்கேஸ்வரி கடந்த மே மாதம் 13ம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும், அதனால் தான் கர்ப்பம் அடைந்த நிலையில், சத்து மாத்திரைகள் என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவினை கலைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருக்கலைப்பு குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும், தன்னை தவறான உறவில் இருந்தபோது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும், 5 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதா, லிங்கேஸ்வரி சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், சினிமா தயாரிப்பாளரான முகம்மது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!