இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்

இலவச கண்புரை  அறுவை சிகிச்சை முகாம்
X

திருவள்ளூர் அருகே இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமினை பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி சங்க செயலாளர் பாலயோகி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் 

மஞ்சாக்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

திருவள்ளூர் அருகே இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமினை பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி சங்க செயலாளர் பாலயோகி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெருமந்தூர் அடுத்த மஞ்சக்குப்பம் கிராமத்தில் கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சமூக சேவகர் கோதண்டன் தலைமை வகித்தார்.

முகாமில், சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி சங்க செயலாளர் பாலயோகி கலந்து கொண்டு இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாமை குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தார்.

இதில் ஆக்சன் ஆப் லவ் அறக்கட்டளை, ஜே.இ. அறக்கட்டளை, மற்றும் சென்னை பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனை இனைந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இலவசமாக கண் சம்பந்தமான தூரப்பார்வை, கிட்டப் பார்வை, கண்ணில் நீர் வடிதல், சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு, கண்ணில் அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு, பின்பு கண்புரை முற்றிய நபர்களை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மற்றும் குறைவான கண்பார்வை குறைபட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, மூக்கு கண்ணாடிகளை வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா முத்து, மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!