ஆவணங்களின்றி காரில் எடுத்துவரப்பட்ட பணம் பறிமுதல்
திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பறிமுதல். தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.
நாடாளுமன்ற தேர்தல் அறிவித்ததை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தி கணக்கில் வராத பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் அருகே கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரவீன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்ட போது காரில் எடுத்துவரப்பட்ட 17 லட்சத்தி 39 ஆயிரத்து 80 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது
இதை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவரது மகள் திருமணத்திற்காக நகை வாங்குவதற்காக சென்னைக்கு பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளூர் வட்டாட்சியரும் கூடுதல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வாசுதேவன் அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அல்லது அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu