சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது..!

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது..!
X

தீப்பற்றி எரியும் கார்.

செங்குன்றம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

செங்குன்றம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. காரில் பயணித்த 4பேர் காரில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கலையரசன் தமது நண்பர்கள் முருகன், செந்தில், நாகராஜ் ஆகியோருடன் புதுப்பாக்கத்தில் உள்ள கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு தமது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே கார் வந்தபோது காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

இதனைக் கண்ட கலையரசன் உடனடியாக சாலை ஓரம் காரை நிறுத்தியதும் காரில் இருந்து 4பேரும் அலறி அடித்து இறங்கினர். சிறிது நேரத்தில் கார் மள மளவென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும் ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு காரில் பற்றிய தீ முழுமையாக அணைக்கப்பட்டது. எனினும் கார் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. கார் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சோழவரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா