ஆரணியில் பேருந்துநிலையம்: மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமோ?.

ஆரணியில் பேருந்துநிலையம்: மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமோ?.
X
ஆரணியில் பேருந்து நிலையம்  இல்லாததால் சாலையோரம் நிற்கும் பேருந்து
ஆரணி பேரூராட்சியில் 125.ஆண்டு காலமாக பேருந்து நிலையம் இல்லாத நிலையை மாற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆரணி பேரூராட்சியில் 125.ஆண்டு காலமாக இல்லாத நிலையில் அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், தபால் நிலையம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

மேலும் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இங்கே தயார் செய்யும் புடவை, லுங்கி, உள்ளிட்ட உடைகளை தயார் செய்து இங்கிருந்து சென்னை தி. நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் வியாபாரம் செய்வார்கள். மேலும் இந்த ஆரணியை சுற்றி பாலவாக்கம், மல்லியன் குப்பம், திருநிலை, மங்கலம், காரணி, புதுப்பாளையம், குமரப்பேட்டை, உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலும் மக்கள் பல ஆண்டு காலமாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

மேற்கொண்ட பகுதியில் விவசாயிகள் நெற்பயிர்கள், கத்தரி, வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகள், பூக்கள் உள்ளிட்ட ரகங்களை பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து ஆரணிக்கு கொண்டு வந்து, இங்கிருந்து மேற்கண்ட காய்கறிகள், மற்றும் பூக்களை சென்னை கோயம்பேடு வணிக வளாகம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, செங்குன்றம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் கொண்டு சென்று வியாபாரம் செய்து செய்வார்கள்.

இது மட்டுமல்லாமல் மேற்கண்ட அலுவலகங்களுக்கு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களும், தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்களும் ஆரணியில் இருந்து பேருந்து மூலம் தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். இதனை அடுத்து சுற்று வட்டார கிராமங்களுக்கு மையமாகக் கொண்ட இந்த ஆரணி பேரூராட்சியில் தற்போது வரை பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. வளர்ந்து வரும் ஆரணி பேரூராட்சியில் சுமார் 125 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் இங்கு பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கு மனு அளித்தும் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்களின் பெருங்குறையாக நீடித்து வருகிறது.

இங்கு பேருந்து நிலையம் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவர்களும், பணி நிமித்தமாக வந்து செல்லும் அரசு அதிகாரிகளும், விவசாய பெருமக்களும் சாலை ஓரங்களில் உள்ள கடைகூரைகளின் கீழ் வெயில் மழை எனும் பார்க்காமல் காத்து நின்று பயணம் செய்து செல்கின்றனர்.

இது குறித்து பகுதி மக்கள் தெரிவிக்கையில் 125 ஆண்டு காலமாக ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நிலம் இருந்தும் அது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதாகவும், பலமுறை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடம் தேர்வு செய்தும் அதற்கான வேலை ஏதும் நடைபெறவில்லை.

இது மட்டுமல்லாமல் ஆரணி பேரூராட்சியில் நடைபெறும் தேர்தலில் நிற்கும் உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்தால் கட்டாயமாக நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியை சம்பிரதாயமாக கூறிக் கொண்டு, பின்னர் வெற்றி பெற்றவுடன் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. எனவே தற்போது இருக்கின்ற திமுக அரசானது மக்களின் நலனை கருதி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள நிலத்தை மீட்டு பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என ஆரணி பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!