பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!
X

திருவள்ளூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

திருவள்ளூரில் பிஎஸ்என்எல் ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் பி சி ஜி அமெரிக்க உடன்பாட்டை ரத்து செய்ய வேண்டும், 132 கோடி பி சி ஜி அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கியதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் நிறுவனம் நூறு சதவீத மத்திய அரசுக்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனம் சமீப காலமாக லாபத்தில் இயங்காமல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதற்கு காரணம் மத்திய அரசு தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சலுகை கொடுப்பது ஆகும்.

சொந்த நிறுவனமான bsnl நிறுவனத்திற்கு எந்தவித சலுகையும் அளிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த நிறுவனத்தை அமெரிக்க நிறுவனமான போஸ்டன் கன்சல்டேசன் குரூப் நிறுவனத்துக்கு 132 கோடி ரூபாய் கொடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபத்தில் இயங்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு 15 ஆண்டு காலமாக போனஸ் வழங்கவில்லை, சரிவர சம்பளம் வழங்கவில்லை, அலவன்ஸ் 20 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இது தொடர்பாக நிறுவனத்திடம் கேட்டால் நிறுவனம் லாபத்தில் இயங்கவில்லை. நஷ்டத்தில் இயங்குகிறது. என்று கூறும் மத்திய அரசு அமெரிக்க நிறுவனம் வேலை துவங்குவதற்கு முன்பாகவே 132 கோடி ரூபாய் கொடுத்து இருப்பது பி.எஸ்.என்.எல் பணியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனையார் நிருபவனங்களுக்கு வழங்கும் அதே சலுகைகள் தாய் நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு வழங்கினால் லாபத்தில் இயங்கும்.

தொழிலாளிகள் ஒரு மாதம் வேலை செய்தால் சம்பளம் தருவார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் லாபம் அடைவதற்கு என்ன வழி என்று நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர்கள் தொழிலாளர்களிடம் கேட்டால் மட்டுமே அதற்கு உண்டான விளக்கம் தெரியும். அதை தவிர்த்து வெளிநாட்டில் உதவி கேட்கும் மத்திய அரசு இதை கைவிட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!