இறையாமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை

இறையாமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை
X
பைல் படம்
இறையாமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த மப்பேடு அருகே உள்ள இறையாமங்கலத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் மப்பேட்டில் ஒரு மளிகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மகன் அன்பரசனும் மருமகள் வைஷாலியும் அதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டனர்.

மணியின் மனைவி வள்ளி வீட்டில் இருந்த போது காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

தண்ணீர் கொடுத்து விட்டு பிறகு வள்ளி வீட்டை பூட்டிவிட்டு சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு மப்பேடு சென்றுள்ளார்.

மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மணி மப்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!