விளையாட செல்போன் தராததால் சிறுவன் தற்கொலை

விளையாட செல்போன் தராததால் சிறுவன் தற்கொலை
X

திருவள்ளூர் அருகே விளையாட செல்போன் தராததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து காெண்டார்.

திருவள்ளூரை அடுத்த குண்ணவளம் குப்பத்து பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (46). இவரது மகன் நிஷாந்த் (16) அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது தந்தை கோவிந்தராஜ் தனது மகனை செல்போன் விளையாடக் கூடாது என்று அறிவுரை கூறி வந்தார். சம்பவத்தன்று நிஷாந்த் தன்னுடைய தந்தையிடம் விளையாட செல்போன் கேட்டுள்ளார். அதற்கு அவர் சிறிது நேரம் கழித்து தருவதாக கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த நிஷாந்த் அறைக்குள் சென்று, விளையாட செல்போன் கொடுக்காத கோபத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவிந்தராஜ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து நிஷாந்த்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!