'பிரியாணி முக்கியம்பா' ஆய்வுக்கு வந்த இடத்தில் விவாதம்..!
பிரியாணி ரொம்ப முக்கியம்பா. முதல்வர் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் இடத்தில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரியாணி குறித்த காரசார விவாதம். கட்சியினரிடையே சலசலப்பு.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்ட திமுக நிர்வாகிகளின் பாக முகவர்கள் கூட்டம் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூர் பகுதிகளில் நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டு இடத்தில் இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர் காந்தி முன்னதாக வருகை புரிந்த நிலையில் கால தாமதமாக வந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் காலதாமதமாக வந்ததை மறைக்கும் வகையில் பிரியாணி குறித்து காரசாரமாக விவாதம் செய்தனர்.
அதில் திருச்சி ஹக்கீம் பிரியாணி சேலம் திமுக நிகழ்ச்சியில் போடப்பட்டதாகவும் நல்லா இருக்கும் என திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தெரிவித்தார். அமைச்சரும் விவாதத்தில் பங்கேற்று எனது மருமகனுக்கும் ஹக்கீம் பிரியாணி வேண்டப்பட்டவர்கள்தான் என கருத்து தெரிவித்தார்.
இதனை அடுத்து நிகழ்ச்சி நடைபெறும் நவம்பர் 5.ஆம் தேதி என்ன கிழமை வருதுப்பா என திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் தனது உதவியாளரிடம் கேட்டு சனிக்கிழமை இல்லையே என்று உறுதிப்படுத்திக்கொண்டார். ஏன்னா பிரியாணி ரொம்ப முக்கியம்பா. சனிக்கிழமையா இருந்திடக்கூடாது என சிரித்துக் கொண்டே பிரியாணி குறித்த விவாதத்தை தொடர்ந்தார்.
உடனடியாக பிரியாணி விவாதத்தை அமைச்சர் முடித்து வைத்து வேறு விவாதம் குறித்து ஆலோசனை செய்யத் தொடங்கினார்.
முதல்வர் பங்கேற்கும் பாக முகவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்த வந்த இடத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்யாமல் பிரியாணி முக்கியம் என விவாதம் நடத்தியது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu