அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்..!

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்..!
X

பள்ளியில் பயிலும் 163 மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மிதிவண்டிகளை வழங்கிய போது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரிகுட்டி தலைமை தாங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜசேகர் வரவேற்றார் . உதவி தலைமையாசிரியர்கள் ஜாய்ஸ்ராணி,பவுன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சேகர் , பொருளாளர் வேதாச்சலம், துணை செயலாளர் சங்கர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரம்யா கல்வியாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்துக்கொண்டு பள்ளியில் பயிலும்163 மாணவ,மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருவதாகவும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தாய் உள்ளத்தோடு நமது முதல்வர் தாய் உள்ளத்தோடு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் இந்தத் திட்டத்தின் காரணமாக ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருவதாகவும், மாணவிகளுக்கு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய்1000. வழங்கி வருவதாகவும், ஒன்றில்லை இரண்டல்ல முதல்வர் செய்யும் ஒவ்வொரு திட்டம் முத்தான திட்டம் என்று அவர் பேசினார்.

விழாவில் திமுக மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன் ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், வி.எஸ்.நேத்தாஜி, கடம்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெய்சங்கர், வார்டு உறுப்பினர் கிரிஜா உதயமூர்த்தி, வியாபாரிகள் சங்கத் தலைவர் பிராங்கிலின் , உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேகர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிரசன்னா முன்னாள் கவுன்சிலர் மாலதி வாசன், முன்னாள் தலைமையாசிரியர் கந்தசாமி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் தேசிய மாணவர்படை அலுவலர் ஓவிய ஆசிரியர் சா.அருணன் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!