பாலவாக்கத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு!

பாலவாக்கத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு!
X
பாலவாக்கத்தில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் சீர்வரிசை பொருட்களை எம்.எல்.ஏ கோவிந்தராஜன் வழங்கினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் கர்ப்பிணி தாழ்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று சீர்வரிசைகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் பாலவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்,100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெற்றிலை,பாக்கு,மஞ்சள் குங்குமம்,வளையல்,சேலை, இனிப்பு,காரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.இதன் பின்னர்,அனைத்து தாய்மார்களுக்கும் ஐந்து வகையான சாதம்,வடை, பாயசம் உள்ளிட்ட உணவு பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்டார திட்ட அலுவலர் வனிதாதேவி தலைமை தாங்கினார்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,ஏ.வி.ராமமூர்த்தி,கே.வி.லோகேஷ், ஆ.சத்தியவேலு, எல்.எஸ்.சுரேஷ்,அபிராமி குமரவேல்,ஜெயலலிதா சசிதரன்,டாக்டர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பாக செய்து வருகிறது என பட்டியலிட்டு கூறினார்.

இதன் பின்னர்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். முன்னதாக அனைவரையும் வட்டார ஒருங்கிணைப்பாளர் துளசிராமன் வரவேற்றார். முடிவில்,மேற்பார்வையாளர் விஜயா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில்,மேற்பார்வையாளர்கள் தனலட்சுமி, வினோதினி,மரகதம்,டீனா மற்றும் திமுக-வை சேர்ந்த மாவட்ட,ஒன்றிய,நகர, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!