தொழில் போட்டி காரணமாக ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு.

தொழில் போட்டி காரணமாக ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு.
X

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவகுமார்.(அடுத்தபடம்) சிசிடிவி  கேமரா காட்சி 

திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக ஆட்டோ ஓட்டுனருக்கு அரிவாள் வெட்டு. வெட்டிய மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் தலைமறைவு.

திருவள்ளுரில் தொழில் போட்டி காரணமாக ஆட்டோ ஓட்டுனரை துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளுர் ரயில் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ சங்க தலைவர் சிவகுமார் -( வயது 48 )ஆட்டோ ஓட்டுனாக இருந்து வருகிறார்.

அதே ரயில் நிலையத்தில் திருவள்ளூர் அடுத்த நம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ( வயது 22). என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.சிவகுமாருக்கும், மகேஷுக்கும் பயணிகள் ஏற்றுவதில் சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு 9 மணி அளவில் திருவள்ளூர் வீரராகவன் கோயில் அருகே சிவகுமார் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து இறக்கிவிட்டு ஆட்டோவில் காத்திருந்தார்.

அவரை பின் தொடர்ந்து தனது கூட்டாளியுடன் வந்த மகேஷ், சிவகுமாரை வீரராகவன் கோயில் அருகே அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்நிலையில் படுகாயம் அடைந்த சிவகுமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் மகேஷின் கூட்டாளியான இளங்கோவனை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மகேஷ், நந்தா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமாக சக ஆட்டோ ஓட்டுநரை அறிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!