திருவள்ளூர் அருகே நகை வியாபாரியைத் தாக்கி நகை பணம் திருட்டு
பைக் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சென்னை நெற்குன்றம் பகுதி நகை வியாபாரிகள்
சென்னை நெற்குன்றம் ஆர் ஜே நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புக் ராம் இவரது மகன் ராமேஸ்லால் என்பவர் அதே பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக கனிஷ் நகைக்கடை நடத்தி வருகிறார்.இந்த கடை மூலம் சென்னை மற்றும் புறநகர் சுற்றியுள்ள சிறிய சிறிய நகை கடைக்கு நகைகளை விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது நகை கடையில் விற்பனையாளராக பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோகன்லால் ,காலூராம் இருவரும்ஒன்றாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் 1400 கிராம்175 சவரன் கொண்ட மூக்குத்தி கம்பல் வளையல் சரடு போன்ற முப்பதுக்கு மேற்பட்ட வகையான தங்க நகைகளை நெற்குன்றம் கடையிலிருந்து கொண்டு விற்பனைக்காக வழக்கமாக கொண்டு வந்துள்ளனர்.
அவர்கள் நெற்குன்றத்தில் இருந்து நேரடியாக மாதவரத்தில் உள்ள நகை கடைக்கு நகையை கொடுத்துவிட்டுபணத்தை பணத்தை வசூலித்த பின்னர் இருசக்கர வாகனத்தில் மீதி 1.400 கிலோ மதிப்பிலான நகைகளை சோகன் லால் இருசக்கர வாகனத்தை இயக்க காலூராம் பின்னால் அமர்ந்தபடி நகைப்பையை வைத்துக்கொண்டு வெங்கல் நோக்கி வந்துள்ளனர்.
அப்போது பூச்சி அத்திப்பட்டு காரணி பேட்டை இடையே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் மூவர் ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தை வழி மறைத்துள்ளனர்.
பின்னர் நகையை வைத்திருந்த காலூராம் இடமிருந்து பிடுங்க முயற்சித்துள்ளனர். அப்போது காலூராம் கொடுக்க மறுத்ததால் வந்தவர்கள் பட்டாகத்தியை கொண்டு அவரை தாக்க முயற்சித்துள்ளனர் .அப்போது தனது இடது கையை வைத்து தடுத்த காலுராமுக்கு கையில் கட்ட விரலில் வெட்டு காயம் பட்டது. அதைத் தொடர்ந்து சோகன் லால் அவரை வெட்ட முயற்சிக்க மேற்கொண்ட போது அங்கிருந்து சிறிது தூரம் தப்பி ஓடி உள்ளார்.
இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்து செங்குன்றம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.நகை பணம் கொள்ளை அடிக்க பட்டது சம்பவம் தொடர்பாக நகை கடை ஊழியர்கள் இருவர் தனது முதலாளியான ராமேஸ்லால்என்பவருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ராமேஸ் லால் கையில் வெட்டு காயம் பட்ட காலூராமை அங்குள்ள மருத்துவமனைக்கு முதல் உதவி அழைத்துச் சென்றுள்ளனர்.வெட்டு காயம் பட்ட காலூராமுக்கு இடது விரல்கள் பகுதியில் 10 தையல்கள் போடப்பட்டது.அதைத் தொடர்ந்து கொள்ளை சம்பவம் தொடர்பாக நகைக் கடை உரிமையாளர் ராமேஸ்லால் வெங்கல் காவல் நிலையத்தில் கொள்ளை தொடர்பாக புகார்அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி பாஸ்கல்யாண் கொள்ளை நடந்த பகுதிகள் ஆய்வு செய்து நகை கடை ஊழியர்களிடம் விசாரணையை மேற்கொண்டார்.நகை கொள்ளை அடித்துச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களை பிடிக்க 8.தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.
இதில் நகை கொள்ளையில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் விவரங்களையும் சேகரித்தும். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்தோம்.கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் திருவள்ளூர் அருகே ஹெல்மெட் அணிந்து வந்து நகை கடைக்கு கொண்டு செல்லப்பட்ட 175 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணத்தை சினிமா பாணியில் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu