மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்
மணிமேகலை விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்தஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைஅமைச்சர் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள மகளிர் சூழ உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமூகத்தை அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பில் ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் 3. மகளிர் சூழ உதவிக் குழுக்கள், 1. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு,1.வட்டார அளவிலான கூட்டமைப்பு, ஒரு கிராம ஒருமை ஒழிப்பு சங்கங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 3 மகளிர் சூழ உதவிக் குழுக்கள், ஒரு பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய விருதுகளுக் காக தேர்வு செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கப்பட்டுள்ளது. எனவே 2022-23ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது வழங்கப்பட்டு அதற்கான நெறிமுறைகளை பின்பற்றி தகுதியான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.
விருதினை பெற சமுதாய அமைப்புகளின் தொடர்ச்சியான கூட்ட நடவடிக்கைகளை நிதி பயன்பாடு மற்றும் சேமிப்பு பெருங் கடன் மகளிர் சூழ உதவி உறுப்பினர்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை மற்றும் பயிற்சிக்கான சமுதாய சார்ந்த பணிகள் பங்கு பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து உரிய படிவத்தில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட ஒன்றியத்தை சார்ந்த வட்டார இயக்க மேலாளர்களிடம் நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்பந்தப்பட்ட நகராட்சி பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்கள் தொடர்பு கொண்டு படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருவள்ளூர் மாவட்ட அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu