பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம் : பக்தர்கள் சாமி தரிசனம்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம் : பக்தர்கள் சாமி தரிசனம்.
X

திருவள்ளூர், பவானியம்மன் கோவிலில் கூடிய பக்தர் கூட்டம்.(உள்படம் : பவானியம்மன்)

ஆடி திருவிழாவையொட்டி பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது வாரத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடனை செலுத்தி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், புகழ்பெற்ற சுயம்புவாக எழுந்தருளிய பவானி அம்மன் கோவில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தற்போது ஆடி மாத திருவிழா 14 வார காலம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

ஆடி மாதம் தொடங்கி உள்ள நிலையில், இன்று இரண்டாவது ஆடி திருவிழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பெரியபாளையம் வந்திருந்தனர்.

அவர்கள் வாடகைக்கு விடுதி எடுத்து தங்கி சிறியவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் மொட்டை அடித்து கோவில் வளாகத்தில் வாடை பொங்கல் வைத்தும், ஆடு,கோழி என பலியிட்டும் வேப்பந்தழை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோவில் சுற்றி வளம் வந்தும், தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலைச் சுற்றிலும் பல பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக பெரியபாளையத்தில் பேருந்து நிலையம் ஆலயம் தங்கும் விடுதிகள் என பல பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆலயத்தின் சார்பில் ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!