பெண் கல்வி குறித்து பேசிய உதவி ஆய்வாளருக்கு நடிகர் தாடி பாலாஜி வாழ்த்து

பெண் கல்வி குறித்து பேசிய  உதவி ஆய்வாளருக்கு நடிகர் தாடி பாலாஜி வாழ்த்து
X

பெண் குழந்தைகள் கல்வி குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பரமசிவனை, நடிகர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து. தெரிவித்தா

அரசியலில் ஈடுபட விருப்பமுள்ளது. விரைவில் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என்றார் நடிகர் தாடிபாலாஜி

பென்னலூர் பேட்டை பகுதியில் பெண் குழந்தைகள் கல்வி குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பரமசிவனை, நடிகர் தாடி பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து. தெரிவித்தார்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம். ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலூர் பேட்டை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் குழந்தைகளை அரசு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பென்னலூர் பேட்டை பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பரமசிவனிடம் தெரிவித்தார். இதை அடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்ற பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் அப்பகுதி மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறும் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை குழந்தைகளுக்கு செய்து வருவதாகவும் காலை உணவு மதிய உணவு என அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படுகிறது. மேலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து தன்னை தொடர்பு கொண்டால் குழந்தைகளின் படிப்பிற்காக எந்த உதவி வேண்டுமானாலும் யார் காலில் விழுந்தாவது செய்து தருகிறேன் என்று பேசியுள்ளார்.

இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இச்சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், காவல் உதவி ஆய்வாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்திருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி, சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்ததோடு நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து நேற்று பென்னலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பரமசிவனை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து நேரில் வாழ்த்துகளை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களில் எந்த நேரமும் தொடர்பு கொண்டாலும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விசயங்களில் தன் பங்கு இருக்கும். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களில் தற்போது வந்துள்ள. செல்வராகவன் படம், சாட்டை, விடுதலை, சூர்யாவின் ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் அனைத்து மக்களிடம் சென்றடைந்துள்ளன. மக்களின் ரசிப்புத்தன்மையும், பேராதரவும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது.

.தமிழக அரசு காவல்துறைக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. முதலமைச்சர் காவல்துறையினரின் குறைகளை குறுகிய காலத்தில் விரைந்து முடிப்பார்கள். ஜெய்பீம் படத்தில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் உள்ளது. விரைவில் அதுபோன்ற வாய்ப்பு தனக்கு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்துவேன் நடிகரில் தனக்கு நாகேஷும் நடிகையில் தனக்கு நயன்தாராவும் பிடிக்கும். வேறு பணிக்காக தற்போது நடிக்கவில்லை. அரசியலில் ஈடுபட தனக்கு விருப்பமுள்ளது. விரைவில் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார் நடிகர் தாடிபாலாஜி.



Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு