பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத 2வது வார திருவிழா கோலாகலம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் கூடியிருந்த பக்தர் கூட்டம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இரண்டாவது ஆடி திருவிழாவை முன்னிட்டு 50,000 மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் . அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பவானி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆடித்திருவிழா தொடர்ந்து 14 வார காலம் விழா காலம் போன்றிருக்கும்.
சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவிலுக்கு. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மட்டுமல்லாது ஆந்திரா, புதுச்சேரி,தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் இருந்தும் தரிசனம் செய்து செல்வது வழக்கம்,
இந்நிலையில் ஆடி மாதம் பிறந்து இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை பவானி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது,தேன்,பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உற்சவர் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க ஆலய மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் மாலை4 மணி அளவில் அம்மன் சிறப்பு அபிஷேகம் முடிந்த பின்னர் குதிரை வாகனத்தில் உற்சவர் பவானி அம்மன் ராஜ அலங்காரத்தில் பெரியபாளையம் முக்கிய வீதிகளில் உலா வருவார்
இன்று பவானி அம்மனை கோவிலில் சுமார் 50,000 மேற்பட்ட பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் தெரிவிக்கையில் புகழ்பெற்ற பவானி அம்மன் ஆலயத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று சனிக்கிழமை பெரியபாளையம் வந்து தங்கி காலையில் அம்மனை தரிசனம் செய்வதற்காக இந்த கியூ வரிசையில் 5 மணி நேரமாக காத்திருகிறோம்.
இத்தகை புகழ்பெற்ற இந்த பவானி அம்மன் திருக்கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை,அடிப்படை வசதிகளை செய்து தரப்படவில்லை. இதனால் முதியவர்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் சிரமப்படுகிறார்கள். பேருந்துகளில் வந்து பெரியபாளையத்தில் இறங்கி நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், ஆடி மாதக்காலத்தில் பெரியபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வரை மினி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் என தெரிவித்தும், முதல் வாரம் மட்டும் இயக்கப்பட்டதாகவும், இரண்டாவது வாரத்தில் அந்த சேவை தொடங்கப்படவில்லை என்று கூறினர்
அதேபோல் இது போன்ற விழா நாட்களில் விஐபி சிறப்பு தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி தரிசனம் காட்டும் நிர்வாகம்,சாமானிய மக்கள் மீது காட்டுவதில்லை என்றும், இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இன்று சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்வதாகவும், மேலும் சிலர் ஆலய வெளிப்புறத்தில் இருந்து கோபுர தரிசனம் செய்துவிட்டு திரும்பி செல்வதாகவும் தெரிவித்தனர்.
கனரக வாகனங்கள், பெரியபாளையம் எல்லையில் திருப்பி வெங்கல்-சீத்தஞ்சேரி வழியாக திருப்பி விடப்பட்டும் சில வாகனங்கள் ஊருக்குள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகின்றது. சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டியதாலும் சிலர் சாலையில் கரைகள் நடத்துவதாலும் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இந்தக் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த காலத்தில் புறவழி சாலையை அமைக்க வேண்டும் என அரசு திட்டமிட்டும் தற்போது அந்தத் திட்டம் ஆனது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தற்போதாவது பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் எளிதாக பக்தர்கள் தரிசனம் செய்யவும், போக்குவரத்து நெருசில் தவிர்ப்பதற்காக புறவழி சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும் பெரியபாளையம் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu