செல்போன் தகராறில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை

செல்போன் தகராறில் இளைஞர் தலையில் கல்லை  போட்டு கொலை
X
செல்போன் தகராறு இளைஞர் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது28). இவர் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குண்டு மேடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று சந்தோஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது அவருக்கும் நண்பரை கவுதம் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் கவுதமின் செல்போனை சந்தோஷ்குமார் பறித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதுபற்றி கவுதமின் தாய் சென்று சந்தோஷ்குமாரிடம் கேட்டார். அப்போது சந்தோஷ்குமார், கவுதமின் தாயை அவதூறாய் பேசி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம், அவரது சகோதரர் கருப்பு முத்து மற்றும் நண்பர் வெள்ளை முத்து ஆகியோர் நேற்று இரவு இது தொடர்பாக சந்தோஷ்குமாரை வரவழைத்து கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

ஆத்திரத்தில் இருந்த கவுதம் உள்பட 3 பேரும் சேர்ந்து சந்தோஷ்குமாரை தாக்கி கீ தள்ளினர். மேலும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெள்ளவேடு போலீசார் விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக கவுதம், சகோதரர் கருப்பு முத்து, நண்பர் வெள்ளை முத்து ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story