திருத்தணி அருகே வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது
Ganja Plant -திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் அகூர் கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரவி வீட்டிற்கு பின்பக்கத்தில் 9 அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. வீட்டில் வளர்த்த கஞ்சா செடியை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டதில் ரவியின் மகன் சக்திவேல் (வயது 25) என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் தலைமறைவாக இருந்த சக்திவேலை கைது செய்த போலீசார் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை யடுத்து திருத்தணி போலீசார் சக்திவேலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu