மின்னல் தாக்கி பெண் பலி 8.பேர் படுகாயம்.

மின்னல் தாக்கி பெண் பலி 8.பேர் படுகாயம்.
X

 மின்னல் தாக்கி உயிரிழந்த செல்லம்மாள்

பெரியபாளையம் அருகே விவசாயி பணிகள் செய்து செய்திருந்தபோது மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்

பெரியபாளையம் அருகே விவசாய பணியின் போது இடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த அமிதா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரது மனைவி செல்லம்மாள்(55) சிறுவாபுரி ஊராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் செல்லம்மாள் (55)சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இவருடன் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த சகிலா, தனலா,வனஜா, நாகேஸ்வரி, பொம்மி, சம்பூர்ணம்,கஸ்தூரி உள்ளிட்ட 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொன்னேரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி போலீசார் உயிரிழந்த செல்லம்மாள் உடலை மீட்டு உடற்கூராய்வு க்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆரணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி உயிரிழந்த செல்லம்மாளுக்கு தண்டபாணி, சூர்யா, கோமதி, தன்ராஜ், என்ற 2 மகன் 2 மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags

Next Story
ai based agriculture in india