வெங்கல் அருகே மின் ஒயர்களை திருடிய 6 பேர் கைது
வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழானூர் துணை மின் நிலைய இளநிலை மின் பொறியாளர் சுப்பிரமணி கடந்த நான்காம் தேதி வயல்வெளிகளில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் மின்கம்பங்களின் மின் வயர்களை மர்ம நபர்கள் துண்டித்து திருடி செல்வதாகவும், அதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் எனவும் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதில் கீழானூர் துணை மின் நிலையத்தில் மின் ஒயர்களை மாற்றி அமைக்கும் ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரரும், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளருமான ஆண்ட்ரூஸ் அலெக்சாண்டர் மற்றும் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒதிக்காடு சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, எழிலரசன்( எ) சுனில், லிங்க குமார். பிரவீன் குமார், சீனிவாசன் உட்பட ஆறு பேரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து மின் ஒயர், ஒயர்களை கட் செய்யும் எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் பணியாளர் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu