மணல் கொள்ளையில் வெவ்வேறு பகுதியில் 10 பேர் கைது..!

மணல் கொள்ளையில் வெவ்வேறு பகுதியில் 10 பேர் கைது..!
X

கைது செய்யப்பட்ட பாஸ்கர் மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்பட்ட வாகனம் 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்றில், ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 10 பேரை போலீசார் கைது அடைப்பு 4 லாரிகள் 1சரக்கு வாகனம் ஜேசிபி பறிமுதல் செய்தனர்.

திருவள்ளுர் அருகே கொசஸ்தலை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி வாகனத்துடன் தப்பிய நபரை போலீசார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து துரத்திப் பிடித்து கைது செய்யப்பட்டார் .

திருவள்ளுர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் பகுதியில் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் அதிகாலை நேரத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

இத்தகவலின் பெயரில் போலீசார் அங்கு கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் திடீரென சென்றுள்ளனர். அங்கு சரக்கு வாகனத்தில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டு மணல் அள்ளிய வாகனத்துடன் 4 பேர்தப்பிச் சென்றுள்ளனர்.

அப்போது போலீசார் செல்போன் டார்ச் லைட் உதவியுடன் அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.வாகனத்தில் மணல் இருந்தால் போலீஸிடம் சிக்கி கைதாகிவிடுவோம் என எண்ணிய அவர்கள் வாகனத்திலிருந்து மணலை கீழே உடனடியாக தள்ளி உள்ளனர்.

பின்னர் எந்தவித அடையாளமும் இல்லாமல் குன்னவலம் பகுதியில் வீட்டின் வெளியே வாகனத்தை கழுவி நிறுத்தி உள்ளனர்.

வாகன அடையாளம் மற்றும் அதன் நம்பரை வைத்து போலீசார் வாகன நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு சென்றுவிட்டனர். அங்கு அந்த வாகனம் கழுவப்பட்டு நீர் சொட்டிக்கொண்டிருந்தது.அந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாருக்கு பயந்து வீட்டின் தண்ணீர் தொட்டி மேல் பதுங்கி இருந்த ஓட்டுனரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பட்டறை பெருமந்தூர் அடுத்த குன்னவலம் 42 வயதுடைய பாஸ்கர் என்பது தெரியவந்தது. வாகன உரிமையாளர் முருகனுடன் இணைந்து தொடர்ச்சியாக ஆற்றில் மணல் திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் பாஸ்கரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாகனத்தின் உரிமையாளர் முருகன் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆற்றில் மணல் அள்ளி தப்பியவர்களை போலீசார் மூன்று கிலோ மீட்டர் துரத்திச் சென்று வாகனத்தையும் ஒட்டுனரையும் கைது செய்தது பாராட்டை பெற்றுள்ளது.

முல்லைவாய் ஏரி

இதேபோல் சோழவரம் ஒன்றியம் பெரிய முல்லைவாயல் ஏரியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு 9 பேரை கைது செய்து 4. லாரிகள்1ஜேசிபி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பெரிய முல்லைவாயல் பகுதியில் உள்ள ஏரியில் இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு வந்த தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பெயரில் தனிப்பிரிவு போலீசார் காவல் ஆணையரின் தனிப்படை உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை நேற்று இரவு பெரிய முல்லைவாயில் ஏரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட விரோதமாக ஜேசிபி எந்திரம் மூலம் மணல் அள்ளி லாரியில் நிரப்பி கொண்டு இருந்தனர். போலீசாரைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து மணல் கொள்ளிக்கு பயன்படுத்தப்பட்ட 4. லாரிகள், ஒரு ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாரிமுத்து, ரவீந்திரன், விக்னேஷ், சங்கர், தனபால், சதீஷ்குமார், கணேசமூர்த்தி, கோடீஸ்வரன், பிரவீன் குமார் ஆகிய 9 பேர் செய்யப்பட்டு இது குறித்து சோழவரம் நீர்வள துறை உதவி பொறியாளர் சுந்தரம் அளித்த புகாரின் பேரில் 9மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் முல்லைவாயில், திருநிலை,சீமாவரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் இரவு நேரங்களில் இது போன்ற மணல் கொள்ளைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், இது இன்று, நேற்று அல்ல வருட கணக்கில் இந்த மணல் கொள்ளை நடைபெறுகிறது எனவும் இதில் கூலிக்கு வேலை செய்யும் ஆட்கள் கைது செய்யப்படுவதாகவும், இவர்களைப் பயன்படுத்தி மணல் கடத்தும் உண்மையான பின்னணிக்கொண்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!