ஆக்கிரமிப்பு நிலம் மற்றும் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய 10 லட்சம் வரி: அரசு நடவடிக்கை
உளுந்தை ஊராட்சி ஒன்றியம் இந்த ஊராட்சி ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி அரசு நிலங்கள் ஆக்கிரமிப்போடு தனியார் ரப்பர் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட வட்டாட்சியர்
திருவள்ளூர் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் 31சென்ட் அரசு நிலத்தை மீட்கவும், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய 10 லட்சம் ரூபாய் வரிப்பணத்தை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள உளுந்தை ஊராட்சி ஒன்றியம் இந்த ஊராட்சி ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி அரசு நிலங்கள் ஆக்கிரமிப்போடு தனியார் ரப்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது இந்த தொழிற்சாலைக்குள் சுமார் இரண்டு கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் 31 சென்ட் நிலமான குட்டை மற்றும் நிலத்தைச் சுற்றி மதில் சுவர் அமைத்து தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் தரப்பில் பலமுறை வருவாய்த் துறையினர் மற்றும் ஆட்சியர் என அனைவருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தாமல் வரியைப்பு செய்து வருவதாகவும் கடந்த மாதம் வட்டாட்சியர் மதியழகனுக்கு மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், ரப்பர் தொழிற்சாலையில் இன்று திடீரென ஆய்வு மேற் கொண்டார். ஆய்வில் தொழிற்சாலைக்குள் தொழிற்சாலையின் கழிவுகளை எரிப்பது அரசு புறம்போக்கு நிலமான சுமார் ஐந்து புள்ளி 31 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தொழிற்சாலையின் நிர்வாக மேலாளரிடம், அரசு நிலத்தை யார் அபகரிப்பது, யார் பட்டா வழங்குவது என வட்டாட்சியர் மதியழகன் கேள்வி எழுப்பினார்.
மேலும் . ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் வேறு எங்கும் நிலம் இல்லை. அதனால் அந்த இடத்தை உடனடியாக காலி செய்து அரசிடம் ஒப்படைக்கும்படியும், அதே போல் உளுந்தை ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை உடனடியாக செலுத்த வேண்டுமென தொழிற்சாலை நிர்வாகிகளிடம் வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu