தண்டவாளத்தை கடக்க முயன்றவர் 10 கி.மீ. இழுத்து செல்லப்பட்டு சடலமாக மீட்பு

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் 10 கி.மீ. இழுத்து செல்லப்பட்டு சடலமாக மீட்பு
X

பைல் படம்.

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி சுமார் 10 கிலோமீட்டர் இழுத்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்ற ஒருவர், பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டதும் பக்கவாட்டில் திடீரென குதித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பக்கத்தில் உள்ள கொக்கியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி சுமார் 10கிலோ மீட்டருக்கும் மேலாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பக்க கொக்கியில் மாட்டி உயிர் இழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாட்னா எக்ஸ்ப்ரஸ் ரயிலில் முன்பக்க கொக்கில் மாட்டி உயிரிழந்து 10 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!