இன்றும் நாளையும் சிறப்பு தடுப்பூசி முகாம்: பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ( 30.4.2021 ) தடுப்பூசி போடும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வாயிலாக 33நடமாடும் வாகனங்களும், 33மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு நாளைக்கு சராசரியாக 6ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி, திருவேற்காடு நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சிகளிலும் திருநின்றவூர் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும், அயப்பாக்கம், காட்டுப்பாக்கம் மற்றும் ஈக்காடு ஊராட்சிகளில் என மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளில் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இரு நாட்களில் சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசிகள் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் தடுப்பு ஊசிகள் போடப்படுகிறது.
மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உங்கள் வீட்டுக்கு அருகிலேயே இலவசமாக நடமாடும் தடுப்பூசி வாகனத்தில் போட்டுக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை என 2 தவணைகளாக போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட வருவார் தங்களது ஆதார் அட்டையினை அவசியம் வரவேண்டும்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்பு தடுப்பூசி நடமாடும் முகாமை பொதுமக்கல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu