தேர்தலில் தொற்று தடுப்புப்பணி: திருவேற்காடு நகராட்சியில் பயிற்சி

தேர்தலில் தொற்று தடுப்புப்பணி: திருவேற்காடு நகராட்சியில் பயிற்சி
X
திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், தேர்தலில் கொரோனா பரவல் தடுப்பு மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு ஊசி வழிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த முகாமில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்; வாக்கு சாவடிகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

இதில், திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டிஆர் லாவண்யா தலைமையில் திருவேற்காடு நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் கலந்து கொண்டு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்