திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளை

திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளை
X
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம் சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுளா மற்றும் இவரது 2 மகன்கள் அருண்குமார், கணபதி ஆகிய மூன்று பேர் குடும்பத்துடன் சாமி கும்பிட திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ அறையை உடைத்து அதில் இருந்த ஒரு சவரன் தங்க மோதிரம் ரூ.1.60லட்சம் ரொக்கப் பணம் விலை உயர்ந்த செல்போன் ஒன்று திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண்குமார் வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!