முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை துவக்கம்
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை அமைச்சர் நாசர் அறுவை சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆவடி அடுத்த மோரை பகுதியில் உள்ள அரியவகை முகச் சிதைவுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.இந்நிலையில் சிறுமி தான்யாவை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறி மேலும் அறுவை சிகிச்சை தொடங்க உள்ள நிலையில் சிறப்பு மருத்துவர்களுடன் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசனை செய்து சிறுமியை அறுவை சிகிச்சைக்கான அறைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ப.சா.கமலேஷ், பூவை நகர கழகச் செயலாளர் ஜி.ஆர்.திருமலை, நகர மன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர், மாவட்ட நிர்வாகிகள் காயத்திரி ஸ்ரீதரன், மகாதேவன், ஏ.ஜெ.ரவி , துணை தலைவர் ஸ்ரீதர், பரமேஸ்வரிகந்தன், ஊராட்சி மன்ற தலைவர் மோரை திவாகரன், கவுன்சிலர் கே.சுரேஷ் நிர்வாகிகள் அண்ணாமலை, எம்.இளையன், புகழேந்தி, சுமதிகுமார், ஏ.ஆர்.பாஸ்கர், பிரபாகரன், பிரகாஷ், கே.சுரேஷ்குமார், ஜெ.சுகுமார், விஜெ.உமாமகேஸ்வரன், மற்றும் மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உடன் சென்று இருந்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த நோய் கண்டேறப்பட்டுள்ளதாகவும் இந்த நோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சையை 10 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu