பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் : சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் கைது..!

பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் :  சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் கைது..!
X

கைது செய்யப்பட்ட பாபுஷா.

மதுரவாயல் அருகே பெண்ணை மிரட்டி பணம் பறித்து பெண்ணை பலாத்காரம் செய்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

மதுரவாயலில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மதுரவாயில் ஸ்ரீ கிருஷ்ணா நகரில் கணவருடன் வசித்து வரும் பெண் ஒருவர் அதே பகுதியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று பெண்ணின் வீட்டிற்கு ஒருவர் வந்து அந்தப் பெண்ணிடம் தான் போலீஸ் என்றும் நீங்கள் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக தகவல் வந்ததாகவும், எனவே உன்னை கைது செய்ய வந்ததாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

பயந்து போன அந்தப் பெண் அவரிடம் கெஞ்சியுள்ளார். அப்போது உன்னை விட வேண்டும் என்றால் தனக்கு ரூபாய் ௧ லட்சம் பணம் தந்தால் மட்டுமே விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவரிடம் ஏடிஎம் காடை கொடுத்து பணம் எடுத்து வரச் சொல்லி அனுப்பியுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அந்த நபர் தன் ஆசைக்கு இணங்குமாறு பெண்ணை மிரட்டி படுக்கை அறைக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் கணவரிடம் ரூபாய் 65.ஆயிரம் பணமும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபர் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த பாபுஷா என்றும் (வயது-28), இவர் ஆயுத படை காவலராக பணியாற்றியவர் என்றும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!