பழுதாகி நின்ற தண்ணீர் லாரியை ஓரத்தில் தள்ளி வைக்க உதவிய போக்குவரத்து போலீசார்

பழுதாகி நின்ற தண்ணீர் லாரியை ஓரத்தில் தள்ளி வைக்க உதவிய போக்குவரத்து போலீசார்
X

பூந்தமல்லியில் பழுதாகி நின்ற தண்ணீர் லாரியை ஏ,லே,லோ ஐலசா போட்டு தள்ளி வைத்த டிராபிக் போலீசார்.

பூந்தமல்லியில் பழுதாகி நின்ற தண்ணீர் லாரியை, ஓரத்தில் தள்ளி வைக்க உதவி செய்த போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

சென்னை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த பாஜக பிரமுகர்கள் தங்களது வாகனங்களை சாலையின் ஒரங்களிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் அவ்வழியாக தண்ணீர் ஏற்றி வந்த லாரி திடீரென சாலையின் நடுவே பழுதடைந்து நின்று போனதால் லாரியை இயக்க முடியாமல் ஓட்டுநர் தத்தளித்தார்.

எவ்வளவு முயற்சி செய்தும் லாரி இயக்க முடியவில்லை அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் ஒன்று திரண்டு பொதுமக்களின் உதவியுடன் லாரியை சிறிது தூரம் தள்ளிச் சென்றனர்.

லாரியை தள்ளிச் சென்று சாலையின் ஓரம் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்த போலீசாரின் இந்த செயலைக் கண்ட பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!