பூவிருந்தவல்லி சொக்கா நல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
பூவிருந்த வல்லி அருகே சொக்கா நல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.
Camp Publication -திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டம், சொக்காநல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, முன்னிலை வகித்தார்கள்.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ப.ச.கமலேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சொக்கை டி.துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி பல்வேறு துறைகளின் சார்பாக 543 பயனாளிகளுக்கு ரூ.2.12 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டா முதியோர் விதவை உதவித் தொகை சாதி சான்றிதழ் உள்ளிட்ட வழங்கி, விழாப் பேருரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் போல ஒவ்வொரு ஊராக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அச்சுற்றுப்பயணத்தின்போது கிடைக்கப்பெற்ற மனுக்களுக்கென ஆட்சிக்கு வந்தவுடன் தனி நிர்வாகம் அமைத்து, அந்த நிர்வாகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மக்களின் தேவைகள் என்னென்ன என கண்டறிந்து, பட்டா, முதியோர் பென்ஷன் திட்டம், விதவையர் பென்ஷன் திட்டம், விவசாய உபபொருட்கள், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளுக்கு தேவையான உபகரணங்கள், வியாபாரிகள் கோரிக்கை, தொழிலாளர்களின் கோரிக்கை, மாணவர்களின் கோரிக்கைகள், பெண்களின் கோரிக்கைகள் என ஒட்டுமொத்தமாக ஆய்ந்தறிந்து, அம்மனுக்களை தனித்தனியாக பிரித்தெடுத்து அதற்கென தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, அதன் கீழ் மிகப்பெரிய பணிகளாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அதில் பெற்ற மனுக்களில் 80 சதவிகிதம் முடித்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும். அந்த அளவுக்கு விளிம்பு நிலையில் உள்ள மக்கள், நடுத்தர மக்கள், ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டங்களை தீட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
விளிம்பு நுனியில் இருக்கின்ற நரிக்குறவ இன மக்களின் கோரிக்கையாக குறவர் இனத்திலிருந்து பழங்குடியின பிரிவில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று நான்கு நாட்களுக்கு முன்பு அவ்வுத்தரவை நரிக்குறவர் இன மக்களுக்கு பெற்றுத்தந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும். எனவே, சாதாரன ஒரு சிறுமி கொடுத்த கோரிக்கையினை ஏற்று நரிக்குறவர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியளிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றி கொடுத்துள்ளார். அதேபோன்று, வில்லிவாக்கத்தில் இருக்கின்ற டேனியாவின் அவய குறலை வாட்ஸ்அப் மூலமாக அறிந்து, அச்சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவசமாக அச்சிறுமிக்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 9 வயது சிறுமிக்கு முதன் முறையாக முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதில் வெற்றி காணப்பட்டுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும்.. எனவே, அடித்தட்டு மக்களின் தேவையை அறிந்து செயல்படும் ஒரு அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் அரசு செயல்பட்டு வருகிறது.
543 பயனாளிகளுக்கும் ரூ.2,12,910 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை என்றும் மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில்; பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்வேறு கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, வட்டாட்சியர்கள் இரா. செல்வம் (பூவிருந்தவல்லி), சுகந்தி, ஒன்றிய நகர செயலாளர்கள் ஜி.ஆர்.திருமலை, புஜ்ஜி.ராமகிருஷ்ணன், சே.பிரேம் ஆனந்த், ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், மாவட்ட கழக நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், வெங்கல் சீனிவாசன், கு.சேகர், பொன்.விமல், ஜெ.மகாதேவன், மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, பிரபுகஜேந்திரன், ஜி.எஸ்.சங்கீதா, எம்.முத்தமிழ் செல்வன், ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஜெ.ஜனார்த்தன், எம்.இளையான், புகழேந்தி, பாஸ்கர், சுமதி குமார், பிரபாகரன், பிரகாஷ், ஜெ.சுதாகர், ராஜாராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் என்.பி.மாரிமுத்து, ஜெயஸ்ரீ லோகநாதன், செல்வம் ஊராட்சி மன்ற தலைவர்கள் வி.தணிகாசலம், , அண்ணாகுமார், சுகுமார், விஜயபாபு, பொன்னுமுருகன், , துணை தலைவர் சீனிவாசன், வார்டு திமுக கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணி, தசரதன், வீரராகவன், கண்ணன், நிர்வாகிகள் எம்.ராம்பாபு, குமரேசன், கந்தன், சாக்ரடீஸ், ஜி.சுகுமார், வெங்கல் பாஸ்கர், கே.ஜி.ஆர் ஸ்டாலின், உள்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu