சேதமடைந்த சாலையை சீரமைத் தர பொதுமக்கள் கோரிக்கை
சேதமடைந்த சாலை.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பூசாலிமேடு பகுதியில் சுமார் 50-ற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டு தற்போது இந்த சாலையானது முழுமையாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் மழை நேரத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்பட்டது. அப்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் சேற்றில் வழுக்கி விழுந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது மழை இல்லாததால் உடனடியாக எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தாமரைப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் பொது மக்களின் சிரமத்தை போக்க அந்தப் பகுதியில் உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெருவில் கையில் இந்த சாலை சேதமடைந்து பல வருடங்கள் ஆகியும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் முறையிட்டும் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே உடனடியாக இந்த பழைய சாலையை அகற்றி புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்றுef கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu