சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!
கோப்பு படம்
சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருவேற்காடு நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை நகராட்சியில் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடையில் மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தார்.
இந்த தகவலை அறிந்த கடையின் உரிமையாளர் உட்பட 10.க்கு மேற்பட்டோர் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைகளை பறித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் தள்ளுமுள்ளும்போது சுகாதாரத்துறை ஆய்வாளர் பிருந்தா தாக்கப்பட்டு காயமடைந்தார்.மேலும் கடை உரிமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டி பிரச்சனை செய்ததால் இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் நகராட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
தகவல் அறிக்கையின் படி குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உபயோகம் செய்த கடைக்கு சீல் வைக்கப்படவில்லை என்பதை கண்டித்து தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கடையில் சென்று பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யச் சென்ற போது கடை உரிமையாளர்கள் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும், எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட கடை நிர்வாகத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதேபோல் நகராட்சி, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்புகள் காவல்துறை வழங்க வேண்டும் என்றும் இதுபோல் கடையில் ஒரு அரசு அலுவலக துப்புரவு ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியவர்கள் மீது குண்ட சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி திருவேற்காடு ஆவடி போன்ற பல்வேறு நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu