பூந்தமல்லி பேருந்து நிலத்தியத்தில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா

பூந்தமல்லி பேருந்து நிலத்தியத்தில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா
X

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மின்சார வாரியம் சார்பில் மின்சார சேமிப்பு வாரம் என்ற பெயரில் மின்சாரம் மின் உற்பத்தி கழக ஊழியர்கள் ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி பேருந்து நிலையம் முன்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி போரூர் கோட்டம் சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது .இதில் 100 க்கும் மேற்ப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் ,அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

இதில் சூரிய மின் சக்தியை பயன்படுத்துவோம், பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவோம். மின்சாரத்தை மிச்சப்படுத்தும் பல்புகளை பயன்படுத்த வேண்டும். மின்சாதனப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அதன் மூலம் மின்சார சேமிப்பை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்ற வாசகங்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்ததோடு மின்சாரத்தை சேமிப்போம் என்ற கோஷங்களையும் எழுப்பினர்.
இதில் மின் வாரிய பொறியாளர்கள் முத்து,சிவகுமார் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare