போரூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 2பேர் கைது!

போரூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 2பேர் கைது!
X

கஞ்சா பதுக்கி வைத்ததாக கைது செய்யப்பட்டவர்கள்.

போரூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை முகப்பேர், நொளம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அண்ணாநகர் காவல் துணை ஆணையர் ஜவஹருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நொளம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக அடிக்கடி ஊரடங்கு நேரத்தில் சுற்றி திரிந்த 2 பேரை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு பிடித்து விசாரணை செய்ததில் இவர்கள் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் என தெரியவந்தது.

உடனடியாக தீவிர விசாரணை நடத்தியதில் போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டனர். உடனடியாக காரம்பாக்கம் சென்ற தனிப்படை போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் 5 பெரிய பொட்டலமாக 11 - 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த நொளம்பூர் பகுதியை சேர்ந்த கோபி(25), தினேஷ்(21), ஆகியோர் தற்போது நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி விற்பனை செய்தார்கள். யார் இவர்களுக்கு சப்ளை செய்தார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!